ஜி.கே.வாசனுக்கு எதிராக குஷ்பு? காங்கிரஸ் திட்டம்.
வருகிற சட்டசபை தேர்தலுக்கு விருப்பமனு வாங்குவது நடந்து வருகிறது. காங்கிரஸ், த.மா.கா. கட்சிகளிலும் விருப்பமனு வாங்கப்பட்டு வருகிறது. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற த.மா.கா. இந்த தேர்தலில் காலூன்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் சேர்ந்து எப்படியாவது சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளது.
இதற்கிடையில் காங்கிரசை பலம் இழக்கச் செய்த த.மா.கா.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதில் காங்கிரசும் முனைப்புடன் இருக்கிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அந்த கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே வாசன் சென்னையில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிப்பதற்கான திட்டங்களை காங்கிரஸ் தீட்டி வருகிறது.
அதன்படி மயிலாப்பூரில் வாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து குஷ்புவை போட்டியிட வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் குஷ்புவின் தீவிர ஆதரவாளரான மயிலை அசோக் என்பவர் குஷ்புவின் பெயரில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்து உள்ளார்.
இது பற்றி குஷ்புவிடம் கேட்ட போது, மனு கொடுத்து இருப்பது பற்றி அறிந்தேன். ஆனால் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். மேலிடத்துக்குத்தான் எந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்று தெரியும் என்று கூறினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.