Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Congress will finalize seats in one or two days – says EVKS Elangovan

By   /  April 4, 2016  /  Comments Off on Congress will finalize seats in one or two days – says EVKS Elangovan

    Print       Email

17-1437132633-10-evks-elangovan-meets-karuna-600திமுகவுடன் தொகுதிப் பங்கீடு இரண்டொரு நாட்களில் முடிவாகிவிடும்- சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

InCorpTaxAct
Suvidha

இந்த கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்காக குலாம் நபி ஆசாத் கடந்த வாரம் சென்னை வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதிப் பங்கீடு பற்றி பேசினார்கள்.

தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் சேராததால் காங்கிரஸ் தரப்பில் 63 தொகுதிகள் கேட்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் 25 தொகுதி கள் மட்டுமே கொடுப்பதற்கு சம்மதித்தனர்.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லி சென்று இங்குள்ள அரசியல் நிலவரங்களை ராகுல் காந்தியிடம் விளக்கினார்.

அதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 35 முதல் 40 தொகுதிகள் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சத்யமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:–

நான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். அப்போது கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கேட்கலாம்? என்று கேட்டார். நான் அதற்குரிய பதிலை தெரிவித்தேன். அதன் அடிப்படையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடியும். எந்தெந்த தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்பதெல்லாம் நாளை (திங்கள்) அல்லது நாளை மறுநாள் (செவ்வாய்) முடிவாகும்.

குலாம் நபி ஆசாத் எப்போது வேண்டுமானாலும் சென்னை வரலாம். எப்போது வருவார் என்பது எனக்கு தெரியாது.

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சரியான வேட்பாளரை நிறுத்துவோம். ஆனால் அந்த தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்படுமா என்று தெரியாது. அதுபற்றி தி.மு.க. தலைமையோடு பேசி முடிவு எடுப்போம்.

மத்திய மின்துறை மந்திரி தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் தொடங்குவது தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நூறு முறை தொடர்பு கொண்டும் சந்திக்க முடியவில்லை என்று தெளிவாக கூறி இருக்கிறார்.

ஆனால் 2 முறை முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறேன் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியிருப்பதை நம்ப முடியாது. வெங்கையா என்றால் வெங்காயம். வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. அது போல்தான் அவரது பேச்சும்.

த.மா.கா. என்று ஒரு கட்சியே இல்லை. இல்லாத கட்சியை பற்றி திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்.  தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்கப்போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டார்.

நான் கருத்துக் கணிப்புகளை நம்புவது இல்லை. மக்களின் எண்ண ஓட்டங்களை நன்றாக அறிந்தவன். எனவே தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் மின்சார வாரியத்தில் நடந்த ஊழல் பற்றி ஆவணப்படம் தயாரித்துள்ளார். அந்த படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

உடனடியாக அந்த படத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையத்தை அணுகுவதா? அல்லது கோர்ட்டை நாடுவதா? என்று முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →