Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Controversial  Cong MLA Vijayadharani says  she will contest  again

By   /  February 13, 2016  /  Comments Off on Controversial  Cong MLA Vijayadharani says  she will contest  again

    Print       Email

Vijayadharaniவிளவங்கோடு தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்- காங். எம்எல்ஏ விஜயதரணி அறிவிப்பு.

குமரி மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதிகளில் ஒன்று விளவங்கோடு.

InCorpTaxAct
Suvidha

கேரள மாநில எல்லையில் அமைந்திருப்பதால் இங்கு கேரள அரசியலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இங்கு எப்போதும் கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவும். என்றாலும் இத்தொகுதியை கம்யூனிஸ்டு கட்சியினர் தங்கள் கோட்டையாக மாற்றி வைத்திருந்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் புதிய வரவாக விஜயதரணியை கட்சி மேலிடம் களத்தில் இறக்கியது. மாவட்டத்தின் நீண்ட நாள் உறுப்பினர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து சுணங்கி நின்ற போது அவர்களை ஒருங்கிணைத்து பணியில் இறங்கினார் விஜயதரணி.

அந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 64 தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் குமரி மாவட்டத்தில் மட்டும் 3 தொகுதிகள் கிடைத்தன. இதில் விஜயதரணி போட்டியிட்ட விளவங்கோடு தொகுதியும் ஒன்றாகும்.

எம்.எல்.ஏ.வாக ஆகும் முன்பு விஜயதரணி டெல்லியில் வக்கீலாக இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தியுடனும் பழக்கம் உண்டு. இதனால் எந்த விசயமாக இருந்தாலும் கட்சியின் மேலிடத்துடன் நேரில் பேசி எதையும் சாதித்து கொள்வார்.

தமிழக காங்கிரசில் இருந்து வாசன் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பித்த போது கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜான்ஜேக்கப் அந்த கட்சிக்கு தாவினார். இதனால் சட்டசபையில் அவர் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி கொறடா பதவி விஜயதரணிக்கு வழங்கப்பட்டது. மேலும் மாநில மகளிரணி தலைவி பொறுப்பையும் ஏற்றார்.

அதன்பின்பு கட்சியின் மாநில தலைவர் இளங்கோவனுடன் பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து கொள்ள அது பிளவுக்கு வழிவகுத்தது. உடனே கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து விஜயதரணி மாநில மகளிரணி தலைவி பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார்.

இதனால் வெறுத்து போன அவர் சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தார். மேலும் முதல்–அமைச்சரை சந்தித்து பேச நேரம் கேட்டு காத்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி விலகி விடுவார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

அவருக்கு தங்கள் கட்சியில் சேருங்கள் என்று பல்வேறு கட்சிகளும் அழைப்பு விடுத்தன. விஜயதரணி எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பதை அறிய அவரது தொகுதி மக்கள் ஆவலாக காத்திருந்த போது அவர் மீண்டும் டெல்லி சென்று அங்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து திரும்பினார். அதன்பின்பு விஜயதரணி அமைதி காத்ததால் அவரை சுற்றி சுழன்ற சர்ச்சைகள் சற்று ஓய்ந்தது.

இப்போது தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என தகவல்கள் பரவி வரும் நிலையில் விஜயதரணி எடுக்க இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த விளவங்கோட்டை காங்கிரஸ் கட்சியின் வலிமை வாய்ந்த தொகுதியாக மாற்றியுள்ளேன். ரூ.160 கோடிக்கு சாலை பணிகள், ரூ.23 கோடியில் புதிய பாலங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். இதுவரை யாரும் செய்யாத பணிகளை செய்துள்ளதால் தொகுதி மக்கள் என் மீது பிரியமாக உள்ளனர்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி உள்ளேன். சவாலான பணிகளை திறம்பட நிறைவேற்றி உள்ளேன். எனவே வருகிற தேர்தலில் நான் தான் இங்கு போட்டியிடுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இங்கு வேறு யாரும் போட்டியிடுவார்கள் என்று நான் கருதவில்லை. யார் நின்றாலும் இங்கு வெற்றி பெற போவது நான்தான். அதில் சந்தேகம் இல்லை.

விளவங்கோடு தொகுதியில் நான் ஆற்றிய பணிகள், மக்களுக்கு செய்த தொண்டுகள் பற்றிய விபரங்களை புத்தகமாக தொகுத்து வைத்திருந்தேன். டெல்லியில் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது அதனை காண்பித்தேன். அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர் என் பணிகளை பாராட்டினார். இதனால் எனக்கு மீண்டும் கட்சி சார்பில் இங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.’ இவ்வாறு விஜயதரணி கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →