Loading...
You are here:  Home  >  World News  >  Asia News  >  Current Article

Controversial Pakistan model who is famous for her provocative appearances Qandeel Baloch killed by her Brother?

By   /  July 16, 2016  /  Comments Off on Controversial Pakistan model who is famous for her provocative appearances Qandeel Baloch killed by her Brother?

    Print       Email

_36909146-f174-11e5-8dad-b4df26f49330சர்ச்சைக்குப் பெயர் பெற்ற பாகிஸ்தானின் மாடல் அழகி கொலை; அண்ணன் கொலை செய்தாரா என்பதில் மர்மம் .

பாகிஸ்தான் நாட்டின் மாடல் அழகியான குவாண்டீல் பாலோச் சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவித்ததன் மூலம் பிரபலம் ஆனவர். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால் நிர்வாண நடனம் ஆடுவேன் என்று தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

InCorpTaxAct
Suvidha

இதற்கிடையில் தனது ‘செல்பி’ படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவரது சசோதரர் சமூக வலைத்தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அண்ணன் கவுரவ கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். குவாண்டீலை கொலை செய்த பின்னர் அவர் அண்ணன் வாசிம் சம்பவ இடத்தில் இருந்து ஓடி விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி அசார் அக்ரம் கூறுகையில் ‘‘அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி இறந்துள்ளார். இது ஒரு கவுரவ கொலை வழக்குபோல் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

_84eba3e8-ecd9-11e5-90f8-20a657ae7b0326 வயதாகும் குவாண்டீல் பாலோச்சின் நிஜப்பெயர் பவுசியா அசீம். மாடலிங் தொழிலுக்கு வந்த பின்னர் தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

மாடலிங் தொழிலை விட்டுவிட வேண்டும் என்று அவரது குடும்பம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது. குறிப்பாக அவரது சகோதரர் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை மந்திரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →