Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Controversy  over  CM’s  watch,  Kerala  friend  gave me:  Siddaramaiah.

By   /  February 26, 2016  /  Comments Off on Controversy  over  CM’s  watch,  Kerala  friend  gave me:  Siddaramaiah.

    Print       Email

siddu-wathcகேரளாவை சேர்ந்த நண்பர் பரிசாகக் கொடுத்தார். கைக்கெடிகாரத்தை அரசிடம் ஒப்படைப்பேன்’- சித்தராமையா அறிவிப்பு

கைக்கெடிகார விவகாரம் கர்நாடகத்தில் பெரியதொரு பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. இது குறித்து சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மத்திய அமலாக்கத்துறையிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் பிரகலாத் ஜோஷி புகார் கொடுத்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் முதல் – மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி

InCorpTaxAct
Suvidha

அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கேராளாவை சேர்ந்த எனது நண்பர் டாக்டர் கோபால் பிள்ளை கிரிஷ் சந்திரவர்மா துபாயில் உள்ளார். அவர் எனது நீண்டகால நண்பர். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூருவுக்கு வந்திருந்தார். அவர் என்னை சந்தித்து பேசியபோது அவர் கையில் இருந்த கைக்கெடிகாரத்தை கழற்றி எனக்கு பரிசாக கொடுத்தார். வேண்டாம் என்று நான் சொன்னேன்.ஆனால் அவர் விரும்பி அந்த கைக்கெடிகாரத்தை கொடுத்தார். நண்பர் தானே என்று அந்த கைக்கெடிகாரத்தை நான் வாங்கிக் கொண்டேன் அப்போது அந்த கைக்கெடிகாரத்தின் விலை எவ்வளவு என்பது எனக்கு தெரியாது. அவர் வேறு ஒருவரிடம் இருந்து அந்த கைக்கெடிகாரத்தை வாங்கியதாக சொன்னார். அந்த கைக்கெடிகாரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ; 8 லட்சம் ஆகும். அந்த கைக்கெடிகாரத்திற்கு உரிய ரசீது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுப்பதாக எனது நண்பர் கூறி இருக்கிறார். நான் விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தை கட்டுவதாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளனர்.

நான் எப்போதும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்த்தும் இல்லை. என் குடும்பத்தினரும் என்னை போலவே சொகுசு வாழ்க்கை வாழவில்லை. அந்த கைக்கெடிகாரத்தை இனிமேல் கட்டமாட்டேன். பிரச்சினைக்குரிய இந்த கைக்கெடிகாரத்தை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். இந்த கைக்கெடிகாரம் விதான சவுதாவில் உள்ள மந்திரிசபை அரங்கத்தில் வைக்கப்படும். இந்த கைக்கெடிகாரம் குறித்து லோக் அயுக்தாவிடம் தகவல் தெரிவிக்கப்படும். வருமான வரித்துறையிடமும் விவரம் தெரிவிக்கப்படும். இதற்கு முன் கர்நாடகத்தில் இதேபோல் கைக்கெடிகார விவகாரம் எழுத்தபோது அப்போது முதல்-மந்திரியாக இருந்தவர் அதை அரசிடம் ஒப்படைத்த உதாரணம் உள்ளது. குமாரசாமியிடம் விலை உயர்ந்த கார்கள் மற்றும் கைக்கெடிகாரங்கள் இருப்பது பற்றி நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கூறினார் சித்தராமய்யா.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →