Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Cook Equals Don Bradman

By   /  July 23, 2016  /  Comments Off on Cook Equals Don Bradman

    Print       Email

டொனால்ட் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் அலைஸ்டர் குக்.cook

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

InCorpTaxAct
Suvidha

தொடக்க வீரராக களம் இறங்கிய அலைஸ்டர் குக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 157 பந்தில் 14 பவுண்டரியுடன் 100 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் 29-வது சதத்தை பதிவு செய்தார். அத்துடன் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சர் டொனால்டு பிராட்மேன் சாதனையை சமன் செய்தார்.

பிராட்மேன் 1928 முதல் 48 வரை சுமார் 20 ஆண்டுகள் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 இன்னிங்சில் 29 சதங்கள் அடித்தார். தற்போது குக் 131 போட்டிகளில் விளையாடி 234 இன்னிங்சில் 29 சதங்கள் அடித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக இருவரும் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளனர். இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்திலும், கல்லிஸ் 45 சதங்களுடன் 2-வது இடத்திலும், பாண்டிங் 41 சதங்களுடன் 3-வது இடத்திலும், சங்ககரா 38 சதங்களுடன் 4-வது இடத்திலும், டிராவிட் 36 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும், கவாஸ்கர், லாரா, ஜெயவர்தனே ஆகியோர் 34 சதங்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →