Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Cops arrest Deenadayalan after 2weeks grilling.

By   /  June 22, 2016  /  Comments Off on Cops arrest Deenadayalan after 2weeks grilling.

    Print       Email

201606051058499568_Deenadayalan-surrenders-to-idol-wing-cops_SECVPFசிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் கைது செய்தனர். அவரது பங்களாவில் கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை ஆழ்வார்பேட்டை முரேஸ்கேட் சாலையில் பங்களாவில் வசிப்பவர் தீனதயாள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அவரது வீடு மற்றும் கிடங்கில் சோதனை நடத்தி 285 ஐம்பொன் மற்றும் கற்சிலைகள், 96 ஓவியங்களை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக அவர் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக மான்சிங்(58), குமார்(58), ராஜாமணி(60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த தீனதயாள் கடந்த 3-ம் தேதி சரணடைந்தார். வயோதிகம் காரணமாக தீனதயாளை போலீஸார் கைது செய்யவில்லை. அவரிடம் தினமும் காலை முதல் இரவு வரை விசாரணை நடத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் சிலைகளை ஆய்வு செய்து அவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உறுதி செய்தனர்.

InCorpTaxAct
Suvidha

தீனதயாளிடம் இருந்து கைப் பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் நேற்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை நீதிபதி ஆய்வு செய்தார். பின்னர் 49 ஐம்பொன் சிலைகள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள திருமேனி அரசு பாதுகாப்புக் கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கற்சிலைகளை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் 18-வது நாளாக நேற்று காலையில் தீனதயாள் வழக்கம்போல் விசாரணைக்கு ஆஜரானார். திருட்டு சிலைகளை வாங்கியது, சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தியது உட்பட பல வழக்குகளுக்கு விசாரணையில் ஆதாரம் கிடைத்ததை தொடர்ந்து நேற்று காலையில் தீனதயாளை போலீஸார் கைது செய்தனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →