பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய உடை; அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திடீரென்று அரசியலில் குதித்தார். ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.
இதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. டெபாசிட்டையும் இழந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன் கவர்ச்சி உடை அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் பங்கேற்க ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அவரும் கவர்ச்சி உடை அணிந்து விழாவுக்கு வந்து இருந்தார்.
அந்த உடையில் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. இதை பார்த்ததும் கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
அத்துடன் மோடியின் உருவம் பொறித்த உடையுடன் தோன்றும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிட்டுள்ளார். ராக்கி சாவந்த்தின் இந்த செயலை பலர் கண்டித்துள்ளனர். பிரதமரை அவமதித்த அவர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மோடியின் உருவப் படத்துடன் கூடிய உடையை அணிந்ததன் மூலம் இந்திய பிரதமரை ராக்கி சாவந்த் அவமதித்து விட்டதாக உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனம் மீரட் நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக மாஜிஸ்திரேட் கோர்ட் அறிவித்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.