Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Court issues non-bailable warrant against Vijay Mallya

By   /  April 18, 2016  /  Comments Off on Court issues non-bailable warrant against Vijay Mallya

    Print       Email

Mallyaவிஜய் மல்லய்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்; நீதிமன்றம் பிறப்பித்தது.

நிதிமுறைகேடு தடுப்புச் சட்ட நீதிமன்றம் திங்களன்று விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

இது குறித்து அமலாக்கத் துறை செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.பவகே, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிங்பிஷர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், 2009 மற்றும் 2010-ம் ஆண்டு நிதியாதார தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐடிபிஐ வங்கிக் கடன் தொகையின் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே அமலாக்கப்பிரிவினரின் குற்றச்சாடுகள் தவறானவை என்று வாதாடினார்.

ஆனால் அமலாக்கப்பிரிவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஹிதென் வெனிகாவ்கர், மல்லையா வாக்குமூலம் அளிக்க அவருக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் வாரண்ட் தேவை என்று கருதுகிறோம் என்றார்.

ஐடிபிஐ வங்கிக் கடன் தொகை ரூ.900 கோடி தொடர்பாக மும்பையில் செயல்படும் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் மற்றும் விஜய் மல்லையா மீது சிபிஐ தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடன் தொகையை திருப்பி செலுத்தும் நிலையில் இல்லை என்று தெரிந்தே ஐடிபிஐ வங்கி அவருக்கு கடன் அளித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.900கோடி வங்கிக் கடன் தொகையில் ரூ.430 கோடியை மல்லையா அயல்நாட்டில் சொத்து வாங்க பயன்படுத்தினார் என்பது அமலாக்கப் பிரிவினரின் வாதம். இதனையடுத்து நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மல்லையா மீது வழக்கு பதிவு செய்தது அமலாக்கத் துறை.

அதாவது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதியளவில் தடுமாறி வருகிறது என்று எச்சரிக்கப்பட்டும் வங்கி அவருக்கு கடன் அளித்துள்ளது என்பதே இந்த வழக்கின் பின்னணி.

இந்நிலையில்தான், தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →