Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

CPI to field Mutharasan against Karunanidhi.

By   /  April 17, 2016  /  Comments Off on CPI to field Mutharasan against Karunanidhi.

    Print       Email

09-1457525212-mutharasan-cpi5566திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் போட்டி.

தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 5 முறை முதல்–அமைச்சராக பதவி வகித்துள்ள கருணாநிதி சந்திக்கும் 12–வது தேர்தல் இது.

InCorpTaxAct
Suvidha

1957–ல் முதல் முதலில் குளித்தலையில் போட்டியிட்டார். சென்னையில் 1967–ல் சைதாப்பேட்டையில் தடம் பதித்தார். அதன் பிறகு தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2011 தேர்தலில் முதல் முறையாக சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டார். கருணாநிதி போட்டியிட்ட எந்த தேர்தலிலும் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. இந்த முறை மீண்டும் தனது சொந்த ஊரில் தேர்தலை சந்திக்கிறார்.

பொதுவாக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து பலம் வாய்ந்த வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் நிறுத்தும். அந்த வகையில் கருணாநிதியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஏ.எம்.ஆர். பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் உள்ளூரில் செல்வாக்கு பெற்றவர்.

மக்கள் நலக் கூட்டணியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போட்டியிடலாம் என்று செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பாக மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும். கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடக்கிறது. அந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சிதான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →