Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

CPM Govt in Kerala: Pinarayi Vijayan sworn in as CM

By   /  May 25, 2016  /  Comments Off on CPM Govt in Kerala: Pinarayi Vijayan sworn in as CM

    Print       Email

vijayan-mமார்க்சிஸ்ட் தலைமையிலான இடது சாரி முன்னணி கேரளத்தில் பதவி ஏற்றது ; பினராய் விஜயன் முதல்வரானார்.

அண்மையில் நடந்த கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமயிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்தியது. இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 91-ஐ கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

InCorpTaxAct
Suvidha

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரான பினராயி விஜயன் கட்சியின் சட்டசபை தலைவராக (முதல்வர்) தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவி ஏற்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணியளவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்தது.

அவருக்கு மாநில கவர்னரும், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான பி.சதாசிவம் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜயனுடன் 18 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

தனது அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக திகழும் என பினராயி விஜயன் வாக்குறுதி அளித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →