Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Dalit massacre victims did not get justice in Bihar: Says Ram Vilas Paswan

By   /  July 25, 2016  /  Comments Off on Dalit massacre victims did not get justice in Bihar: Says Ram Vilas Paswan

    Print       Email

Ram-Vilas-paswan-PTIதலித் மக்கள் மீது அக்கறை உள்ளது போல் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம்: நிதிஷ், லாலு மீது பஸ்வான் சாடல்

குஜராத் மாநிலம் கிர்–சோம்நாத் மாவட்டத்துக்கு உட்பட்ட உனா என்ற இடத்துக்கு அருகே இறந்து போன பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றதுடன், பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பியது.

InCorpTaxAct
Suvidha

இந்த விவகாரத்தில் குஜராத் அரசு மீது பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும் கடும் விமர்சனங்கள் செய்தனர்.

இந்நிலையில், வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்படும் தலித் மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத்தும் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சாடியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைக்காத நிலையில், குஜராத்தில் நடக்கும் விவகாரத்தில் மூக்கை நுழைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

பீகாரில் கீழ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஐகோர்ட்டில் விடுவிக்கப்பட்டனர். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான போலீஸ் துறையினர் சரியான ஆதாரங்களை தாக்கல் செய்யாததே இதற்கு காரணம் என்று பஸ்வான் கூறினார்.

-அமுதவன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →