Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Declare  Kumbakonam  as holy place – BJP MP Tarun Vijay.

By   /  February 15, 2016  /  Comments Off on Declare  Kumbakonam  as holy place – BJP MP Tarun Vijay.

    Print       Email

கும்பகோணத்தைப் புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும் –பாஜக எம்பி தருண் விஜய் கோரிக்கை.201506051112471018_BJP-MP-Tarun-Vijay-gets-threat-mails-from-ISIS_SECVPF

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமக பெரு விழாவில் உத்தரகாண்ட் பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜய் கலந்து கொண்டார். மகாமக குளத்திற்கு சென்ற அவர் தீர்த்தங்களை தெளித்து கொண்டு கோவில்களில் வழிபாடு நடத்தினார்.

InCorpTaxAct
Suvidha

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கும்பமேளா, மகாமகம் என்றவுடன் வட இந்தியாவில் உள்ள வாரணாசி, நாசிக், அலகாபாத் போன்றவை தான் நினைவுக்கு வரும். அதே அளவு புண்ணியம் நிறைந்தது கும்பகோணம்.

இத்தகைய சிறப்பு மிக்க மகாமக விழாவில் வட இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் வந்து புனித நீராட வேண்டும். இச்சிறப்பு மிக்க மகாமக குளம் மட்டுமல்லாது, கும்பகோணம் நகரத்தையே தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும்.

இந்நகரத்தை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்க வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவேன். மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

இது போன்று பெறப்படும் நிதியை தமிழக அரசு முறையாக பெற்று உரிய வகையில் செலவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி குறித்து கேட்ட போது நான் பக்தராக இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வறுமை, தீண்டாமை, இரட்டை டம்ளர் முறை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இதையெல்லாம் பிரதமர் மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →