Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Delhi turned into India – Pakistan by centre: Says Kejriwal on ‘Talk to Ak’.

By   /  July 17, 2016  /  Comments Off on Delhi turned into India – Pakistan by centre: Says Kejriwal on ‘Talk to Ak’.

    Print       Email

arvind-kejriwal_650x400_51468734509டெல்லியை இந்தியா பாகிஸ்தான் போல் மத்திய அரசு மாற்றிவிட்டது: டாக் டூ ஏகே நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் குற்றசாட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கும் டாக் டூ ஏகே நிகழ்ச்சியை இன்று நடத்தினார். நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள், தங்கள் கேள்விகளை போன், டுவிட்டர், இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக கேட்டனர்.

InCorpTaxAct
Suvidha

மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கெஜ்ரிவால், மத்திய அரசு மட்டும் எங்களுக்கு முட்டுகட்டை போடாமல் இருந்தால் நாங்கள் இன்னும் 4 மடங்கு சிறப்பாக செயல்பட்டிருபோம். டெல்லியை இந்தியா பாகிஸ்தான் போல் மத்திய அரசு மாற்றிவிட்டது என்று கூறினார்.

மேலும் அவர் “ நாங்கள் கற்பனையான முன்னேற்றத்தை குறித்து பேசவில்லை. நீங்கள் நேரடியாக டெல்லிக்கு வந்து நாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளை பார்க்கலாம். சி.பி.ஐ.-யை பாஜ.க. தலைவர் அமித் ஷா தலைமையேற்று நடத்துவதாக கேள்விப்பட்டோம். ராஜேந்திர குமார் (டெல்லி அரசின் முதன்மை செயலாளர்) குறிவைக்கப்பட்டுள்ளார்.” என மத்திய அரசு மீது குற்றம் சுமத்தினார்.

டெல்லி அரசு தேவையிலாமல் விளம்பரங்களுக்கு செலவு செய்வது பற்றியும், வை-பை திட்டம் பற்றியும் மக்கள் கேள்வி எழுப்பியதற்கு “ டெல்லி அரசு விளம்பரங்களுக்காக ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் தான் செலவு செய்கிறது. 500 கோடி ரூபாய் இல்லை. வை-பை திட்டம் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்” என்று கெஜ்ரிவால் பதில் அளித்தார்.

டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில் தங்கள் கட்சியை விரிவுப்படுத்த ஆம் ஆத்மி முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக தான் டாக் டூ ஏகே நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் மோடியின் ’மனதில் இருந்து பேசுகிறேன்’ என்ற இரண்டு மணிநேர பதிவு செய்யப்பட்ட ரேடியோ உரைக்கு மாற்றாக, நேரடியாக மக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் ’டாக் டூ ஏகே’ திட்டத்தை ஆம் ஆத்மி அறிமுகப்படுத்தியுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →