ரூபாய் நோட்டு நடவடிக்கை பிரம்மாண்டமான தவறு: பொருளாதார மேதை அமர்த்தியா சென்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் முழுவதுவமாக முடிவடைந்து விட்டது. இருப்பினும் இன்னும் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. இன்னும் ஏ.டி.எம் மையம் சரியாக இயங்கவில்லை. வங்கிகளிலும் போதிய பணம் கிடைப்பதில்லை.
இந்நிலையில், ரூபாய் நோட்டு நடவடிக்கை பிரம்மாண்டமான தவறு என்று பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமர்த்தியா சென் கூறியதாவது:-
கருப்பு பணத்தை ஒழிக்க 86 சதவீதம் புழகத்தில் இருந்த பணம் மதிப்பிழக்கம் செய்யப்படுகிறது. இந்த புள்ளிவிவரம் எல்லோருக்கும் தெரியும். பிரதமர் மோடிக்கும் திறந்திருக்க வேண்டும். மொத்தம் புழகத்தில் உள்ள பணத்தில் 6-7 சதவீதம் தான் கருப்பு பணம் என்றால், இந்த நடவடிக்கை எப்படி மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இது எனக்கு புரியவே இல்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.