மோடி தனது மக்களை ஏமாற்றிவிட்டார் ; அவரது நண்பர்களுக்கு திட்டம் பற்றி முன்பே தெரியும் – கெஜ்ரிவால்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த 4 நாட்களாக நாடுமுழுவதும் மக்கள் பண பரிவர்த்தைக்காக வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஏ.டி.எம்-களை முற்றுகையிட்டு வருகின்றனர். மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், பழைய நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது கார்ப்பரேட் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:-
என்று நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் உள்ள மக்களை கடுமையாக பாதித்துள்ளது. மோடி அகந்தையான சிந்தனை இது. அதிகப்படியான பணத் தட்டுப்பாட்டினை உருவாக்கியுள்ள இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
இன்னும் நேரம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு மேலும் சீர்குலைந்து போவதற்குள் முடிவை திரும்ப பெறுங்கள். நிலைமைகளை சமாளிக்க அரசிடம் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி விட்டார். இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமர் மோடி கோவாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டது முதல் மக்களிடம் இருந்து நிறைய அழைப்பு வருகிறது. அவர்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.
உண்மையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி முக்கியத்தும் அளிப்பதாக இருந்தால், அவர் கண்டிப்பாக தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.