Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Dhoni continues defeats: Rohit orchestrates Mumbai’s win.

By   /  May 2, 2016  /  Comments Off on Dhoni continues defeats: Rohit orchestrates Mumbai’s win.

    Print       Email

Sharma_2836318gஐபிஎல்; மீண்டும் தோல்வியடைந்த டோனி அணி; மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

டோனி தலைமையிலான புனே அணி இந்த அளவுக்கு திணறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். 7 ஆட்டங்களில் 5-ல் மண்ணை கவ்வியிருக்கும் புனே அணி எஞ்சிய 7 ஆட்டங்களில் குறைந்தது 5 அல்லது 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. நேற்று முன்தினம் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 195 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சில் சோடை போனதால் தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் வலுவான மும்பை அணியை புனே எதிர்க்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார். புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. புனே அணியில் அதிகப்பட்சமாக திவாரி 45 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். சுமித் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் மும்பை களமிறங்கியது. வழக்கம் போல் புனே அணியின் பந்து வீச்சாளர்களால் தொடக்க வீரர்களை விரைவில் விழ்த்த முடியவில்லை. இதனால் மும்பை அணி அதிரடியான தொடக்கத்தை பெற்றது. மும்பை அணியின் ஸ்கோர் 39 ஆக இருந்த போது பார்த்திவ் படேல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய ராயுடுவும் தன் பங்கிற்கு 22 ரன்கள் எடுத்தார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மும்பை அணி 18.3 ஓவரில் 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் 27 ரன்களுடனும், ரோகித் சர்மா 85 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →