Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Dhoni  takes  dig  at  media ‘ you come and play cricket’ tells to reporter.

By   /  March 28, 2016  /  Comments Off on Dhoni  takes  dig  at  media ‘ you come and play cricket’ tells to reporter.

    Print       Email

Ms-dhoni5ஒரு ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது பற்றி கேட்டதற்கு தோனி எரிச்சல் ‘நீங்கள் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள்’ என்று நிருபர் மீது பாய்ச்சல்.

வங்காளதேசத்திற்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது போதுமானதா? என சமீபத்தில் செய்தியாளர் கேட்ட கேள்வி இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை எரிச்சலூட்டியது.

InCorpTaxAct
Suvidha

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “ஓட்ட விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. இது போன்ற ஒரு வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?” என்று தோனியிடம் ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு தோனி, “நீங்கள் பேசுவதை பார்த்தால் இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பது தெரிகிறது” என்று கோபமாக பதிலளித்தார்.

நேற்று மொகாலியில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை நொறுக்கியெடுத்து இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

முன்னதாக, இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கால்பந்து பயிற்சியை முடித்து கொண்டு புறப்பட்ட தோனி, அங்கிருந்த நிருபரை பார்த்து, “நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்ல முன்வராத நிலையில் நிருபர்களை எரிச்சலாக பார்த்த தோனி, “உங்களால் முடிந்தால் நீங்கள் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள். உங்களது வேலையை நாங்கள் பார்க்கிறோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்ததாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →