Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Differences in ‘Vidudhalai Chiruthaigal‘Party: Deputy Gen.sec. Writes to Thirumavalavan.

By   /  August 14, 2016  /  Comments Off on Differences in ‘Vidudhalai Chiruthaigal‘Party: Deputy Gen.sec. Writes to Thirumavalavan.

    Print       Email

201604111706461650_VCK-candidate-list-on-May-16-Thirumavalavan_SECVPFவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் குழப்பம்; மோடிக்கு ரவிகுமார் ஆதரவு; எதிர்ப்பு தெரிவித்து ஆளூர் ஷா திருமாவளவனுக்குக் கடிதம்.

பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த ரவிக்குமாருக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு திருமாவளவனுக்கு துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷா நவாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

InCorpTaxAct
Suvidha

குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் தலித் மக்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப் பட்டது. இதுகுறித்து கருத்து தெரி வித்த பிரதமர் மோடி, ‘தலித்துகளை தாக்குவதற்கு பதிலாக என்னைத் தாக்குங்கள்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் ‘மோடி தனது உள்ளத்தில் இருந்து கூறியிருந்தாலும், உதட்டில் இருந்து கூறியிருந்தாலும் பாராட்டத்தக்கது’ என தெரிவித்திருந்தார்.

ரவிக்குமாரின் இந்தப் பாராட்டு ஏற்புடையதல்ல என்றும் இது கட்சி மீதான நம்பகத்தன்மையை சிதைக்கும் என்றும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆளுர் ஷா நவாஸ் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘ஏற்கெனவே, தருண் விஜயை விசிக ஆதரிக்க காரணமாக இருந்த பொதுச் செயலாளர் ரவிக்குமார், தற்போது மோடியின் பேச்சையும் ஆதரித்துள்ளார். இந்துத்துவத்தை எதிர்த்து மாநாடு, கூட்டங்களை விசிக நடத்திவரும் சூழலில் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாஜகவின் பிரதமர் மோடி, தருண் விஜய்க்கு ஆதரவாக ரவிக் குமார் செயல்படுவது கட்சியின் நம் பகத்தன்மையை கேள்விக்குறி யாக்கியுள்ளது. இதுதொடர்பாக தலைவர் என்ற முறையில் தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதுபற்றி ரவிக்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தலித்துகளை கோயிலுக்கு அழைத்துச் சென்ற போராட்டத்தில் ஈடுபட்ட தருண் விஜய் தாக்குதலுக்கு ஆளானபோது, விசிக தலைவர் திருமாவளவன், தாமாகவே அவருக்கு ஆதரவு தெரிவித்தார். தருண் விஜய் நடத்திய நிகழ்ச்சியிலும், அவரது அழைப்பை ஏற்று பங்கேற்றார்.

தலித்துகளை தாக்குவதற்கு பதில் என்னைத் தாக்குங்கள் என்று பிரதமர் மோடி பேசியதை திருமாவளனும் வரவேற்றுள்ளார். கட்சியின் கருத்துதான் தலை வரின் கருத்து. தலைவரின் கருத்தில் இருந்து முரண் பட்டு எதையும் நான் சொல்ல வில்லை.

இந்துத்துவத்துக்கு எதிரான எனது அரசியல் இன்று தொடங்கி யதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறேன். ஆயிரம் புரிதல் இல்லாமல் பேசுவோருக்கு நான் விளக்கம் அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →