Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Director Shankar is the guru of Rajamouli – Says  Vijayendra Prasad , Rajamouli’s father.

By   /  April 16, 2016  /  Comments Off on Director Shankar is the guru of Rajamouli – Says  Vijayendra Prasad , Rajamouli’s father.

    Print       Email

prabhas1_2815203gசங்கர்தான் ராஜமௌலியின் குரு பாகுபலியின் கதாசிரியரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் பேட்டி.

சென்னையில் உள்ள பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரியில் மாதந்தோறும் ஒரு திரைப்பட வல்லுநர் மாணவர்களோடு கலந்துரையாடுவது வழக்கம். அவ்வாறு மாணவர்களோடு கலந்துரையாடச் சென்னை வந்திருந்தார் ‘நான் ஈ’, ‘பாகுபலி’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராஜமெளலியின் தந்தை. அவருடன் உரையாடியதிலிருந்து…

InCorpTaxAct
Suvidha

நீங்கள் எழுதிய பாகுபலிபடத்திற்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்?

‘பாகுபலி’ படத்தைப் பொறுத்தவரை எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் இது மாநில, தேச மொழி எல்லைகளைக் கடந்திருக்கிறது. இதனால் பல இந்தியப் படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும். அக்கதையை நான் எழுதும்போது வெற்றி பெறும் எனத் தெரியும். ஆனால், உலக அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. நான் என்னவெல்லாம் நினைத்து எழுதினேனோ அதைவிட மேலாக ராஜமெளலி மிகப் பிரமாதமாகப் பண்ணியிருந்தார்.

பாகுபலி கதை எப்படி உருவானது?

பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார், நான் இயக்குகிறேன், ஒரு சரித்திரக் கதை எனக் கேட்டார் ராஜமெளலி. அப்போது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தண்ணீரில் வரும் தாய் உள்ளிட்ட 3 காட்சிகளைச் சொன்னேன். நன்றாக இருக்கிறது என்றார். முழுக்கதையாகத் தயார் பண்ணிக் கொடுத்தேன். கதை எழுதும் போதே 2 பாகங்களாகத் தான் எழுதினேன். அடுத்த பாகங்கள் எல்லாம் வாய்ப்பில்லை.

ஷங்கரோடு ராஜமெளலியை ஒப்பிடுகிறார்கள். ராஜமெளலி ஷங்கரை மிஞ்சிவிட்டார் என்றும் சொல்கிறார்களே..

ஷங்கர் சார்தான் ராஜமெளலிக்கு உத்வேகம் அளித்தவர். எப்போதுமே அவரை மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்லுவார். எப்படி நீங்கள் குருவோடு சிஷ்யரை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? குரு எப்போதுமே குருதான். சிஷ்யன் எப்போதுமே சிஷ்யன்தான். ஷங்கரை ராஜமெளலி மிஞ்சிவிட்டார் என்று சொல்லுவது தவறு

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →