Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Disappoints  with  vijayakanth’s  decision 5000 DMDK men joins  DMK.

By   /  March 16, 2016  /  Comments Off on Disappoints  with  vijayakanth’s  decision 5000 DMDK men joins  DMK.

    Print       Email

43a7a243-4c65-4b72-9d96-cd9e03ab807c_S_secvpfவிஜயகாந்த் முடிவால் ராமநாதபுரம் தொழில் அதிபர் சிங்கம் பஷீர் தலைமையில் 5 ஆயிரம் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைகிறார்கள்.

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? பா.ஜனதா கூட்டணிக்கு போவாரா? என்று பரபரப்புடன் எதிர் பார்க்கப்பட்டது. இரு அணியினரும் தே.மு.தி.க.வுடன் ரகசிய பேச்சு நடத்தினார்கள். அப்போது, விஜயகாந்த் கடுமையான நிபந்தனைகள் விதித்தார்.

InCorpTaxAct
Suvidha

கடைசியில் அவர் தி.மு.க. கூட்டணியில்தான் சேருவார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஊடகங்களிலும், ‘வாட்ஸ்–அப்’ போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியானது.

இதனால் தே.மு.தி.க. தொண்டர்களும் உற்சாகம் ஆனார்கள். தே.மு.தி.க. சார்பில் போட்டியிட கட்சி தலைமையிடம் பணம் செலுத்தி விருப்பமனு அளித்தனர்.

யாருடன் கூட்டணி என்பதை சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்ற விஜயகாந்த் கடந்த 11–ந் தேதி நடந்த மகளிர் அணி கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

அவரது அறிவிப்பால் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இதை விஜயகாந்த் நடத்திய கூட்டத்திலேயே காண முடிந்தது. வழக்கமாக விஜயகாந்த் கூட்டணி பற்றி பேசும் போது தொண்டர்கள் கரகோஷம் எழுப்புவார்கள்.

ஆனால், அன்று அவர் தனித்து போட்டி என்று சொன்னதும் தொண்டர்களிடையே கரகோஷம் இல்லை. உற்சாகமும் இல்லை. விஜயகாந்த் முடிவால் நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேல்மட்ட நிர்வாகிகள் விஜயகாந்துடன் இருந்தாலும் கீழ்மட்ட நிர்வாகிகள் வேறு கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் தி.மு.க. மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை தி.மு.க.வும் வரவேற்க தயாரானது. அதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகியாக செயல்பட்டு வந்த பிரபல தொழில் அதிபர் சிங்கம் பஷீர். முன்னாள் அமைச்சரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பெரிய கருப்பண்ணனை சந்தித்து சால்வை அணிவித்து தி.மு.க.வில் இணைந்தார்.

இது தொடர்பாக சிங்கம் பஷீர் நிருபரிடம் கூறியதாவது:–

சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என்று விஜயகாந்த் எடுத்திருக்கிற முடிவு தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.கூட சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சேர்த்துதான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை எதிர்நோக்கும் என நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அறிவித்தது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருப்ப மனு கொடுத்து பணம் கட்டிய பலரும் பணத்தை திரும்ப பெறும் நிலையில் உள்ளனர். எவ்வித பதவியும் எதிர் நோக்காமல், தே.மு.தி.க.வுக்காக உழைத்த என்னைப் போன்ற தொண்டர்களுக்கு விஜயகாந்தின் முடிவு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்து இருக்கிறது.

எனவே தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5 ஆயிரம் தொண்டர்களுடன் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →