தமிழக இடைத் தேர்தல்களில் தேமுதிகவும் போட்டியிட முடிவு ; வேட்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேல் இறந்ததால் அந்த தொகுதிக்கும் நவம்பர் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
3 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகியவை போட்டியிடுகிறது. இந்த 4 கட்சிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது.
3 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் 3 தொகுதியிலும் போட்டியிட தே.மு.தி.க. திடீரென முடிவு செய்துள்ளது.
இதற்கான வேட்பாளர்களை பட்டியலை விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
- அரவக்குறிச்சி- அரவை எம்.முத்து.
தஞ்சாவூர்- வி.அப்துல்லா சேட்.
3. திருப்பரங்குன்றம்- தன பாண்டியன்.தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடுவதால் 5 முனை போட்டி நிலவுகிறது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.