Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMDK  release its election manifesto  part -1

By   /  February 22, 2016  /  Comments Off on DMDK  release its election manifesto  part -1

    Print       Email

 dmdk_b-500x500தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் 2016- சட்டசபை தேர்தலுக்கான முதல் பகுதி தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள்:-

InCorpTaxAct
Suvidha

நம்மாழ்வார் விவசாய திட்டம்;

1.நாற்று நடுவதற்குரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும்.

2.மானிய விலையில் இயற்கை உரம் வழங்கப்படும்.

3.மூன்று மடங்கு உற்பத்தி தரும் வித்துக்கள் தரப்படும்.

4.பிறநாட்டு விவசாய முறைகளை கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவார்கள். இதனால் ஐந்து வருடங்களில் 25 ஆயிரம் விவசாயிகள் பலன்பெறுவார்கள்.5.அரிசி, எண்ணெய், உணவு தானியங்கள் முதல் காய்கறி, பால் போன்ற அனைத்தும், தமிழக மக்களின் தேவையை கணக்கிட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்து விலையை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

6.தமிழகத்தில் ஏழுகோடி மக்களுக்கு பால் தேவை. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபருக்கு 150 மில்லிலிட்டர் எனக்கணக்கிட்டால், 1.25கோடி லிட்டர் பால் தேவைப்படும். பிற தேவைக்கேற்ப அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும். பொதுமக்கள் குறைந்தவிலையில் வாங்க விலை நிர்ணயம் செய்யப்படும்.

நிலம் இல்லாத 60 வயது நிரம்பிய ஆண், பெண் விவசாயிகள்அனைவருக்கும் மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். அதனால் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மற்றும் மீனவர் ஓய்வூதிய திட்டம், கைத்தறி நெசவாளர்கள் ஓய்வூதியத் திட்டம், பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு காலை உணவளிக்கும் திட்டம், மாலை நேர மகளிர் கல்லூரிகள், பெட்ரோல் 45 ரூபாய்க்கும், டீசல் 35 ரூபாய்க்கும் விற்கும் திட்டம், தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்கும் திட்டம் மற்றும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் திட்டம் என்று பல கவர்ச்சிகரமான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →