Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK  alliance will form the Govt –says Kanimozhi.

By   /  February 22, 2016  /  Comments Off on DMK  alliance will form the Govt –says Kanimozhi.

    Print       Email

4060247467_922b095cb7_zவருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தி.மு.க. மாநில மகளிர் அணி துணை தலைவர் காரல் மார்க்ஸ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி தஞ்சை வந்தார். முன்னதாக தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

InCorpTaxAct
Suvidha

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பேரணி வெற்றி பேரணியாக அமைந்திருந்தது. அதில் கலந்துகொண்டவர்களை பார்த்தபோது இந்தியாவிலேயே பார்த்திராத கூட்டமாக இருந்தது. இதுவே தி.மு.க.வின் வெற்றிக்கு அடிகோளாக எடுத்துக்கொள்ளவேண்டும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது.

எந்த பகுதிக்கு சென்று மக்களை சந்தித்தாலும், ஒரு பெரிய மாற்றம், இந்த அரசுக்கு எதிரான உணர்வு மக்கள் மனதில் எழுந்திருக்கிறது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது ஒரு செயலற்ற அரசு, மக்களுக்கு விரோதமான அரசு என மிகத்தெளிவாக தெரிகிறது.

விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதுமே செவிசாய்த்ததில்லை. இந்த அரசின் கடைசி காலகட்டத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது? இதுவெறும் கண்துடைப்பு. இப்பொழுது, கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக கூறும் அரசு மக்களை, போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்கான செயல்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் அணியாக தி.மு.க. கூட்டணி அமையும். அந்த கூட்டணி என்ன என்பது பற்றி தலைவர் கலைஞர் முடிவு செய்வார். இந்த நேரத்தில் மற்ற கட்சிகளை பற்றி பேச தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →