Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK alliance will win Assembly polls – says Gulam Nabi Azad.

By   /  April 4, 2016  /  Comments Off on DMK alliance will win Assembly polls – says Gulam Nabi Azad.

    Print       Email

திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்- குலாம் நபி ஆசாத் பேட்டி.azad-stalin

தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டவுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

InCorpTaxAct
Suvidha

நான் ரொம்ப மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நாங்கள் தொகுதி பங்கீடு குறித்து 2 முறை பேசினோம். எங்களுடன் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மற்றும் தலைவர்களும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இளம் தலைவர் மு.க.ஸ்டா லினும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் செய்து கொண்டோம்.

இந்த தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நான் உறுதியாக சொல்கிறேன். அகில இந்திய அளவில் சோனியா காந்தி தலைமையில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையப்போவது உறுதி.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக அ.தி.மு.க. அல்லது தி.மு.க.தான் மாறிமாறி ஆட்சி அமைத்து வந்துள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. கடந்த பல ஆண்டுகளாக 2வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை.

எனவே இந்த முறை கருணாநிதி தலைமையில் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சி அமைய காங்கிரஸ் இணைந்து பணியாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறிய தாவது:–

தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு குறித்து ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் காங்கிரசார் தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்து பேசினார்கள். தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.

குலாம் நபி ஆசாத் கூறியது போல் தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை விரட்டியடித்து, அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் சாதித்து காட்டும்.

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளதால் இன்று மாலையில் இருந்து தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவினர் காங்கிரஸ் குழுவினருடன் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

கேள்வி:– காங்கிரசுக்கு 41 தொகுதிகள் குறைவு என்று கருதுகிறார்களா?

பதில்:– அது போன்ற பிரச்சினை ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →