Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK  allots  seats for Makkal  DMDK

By   /  April 12, 2016  /  Comments Off on DMK  allots  seats for Makkal  DMDK

    Print       Email

13000194_1179757532036450_4988656773534249018_nமக்கள் தேமுதிகவிற்கு திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு.

சந்திர குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

InCorpTaxAct
Suvidha

அப்போது அவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். மக்கள் தே.மு.தி.க.வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் 3 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன் வந்தது.

அதன்படி சந்திரகுமாருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியும் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு மேட்டூர் தொகுதியும், சி.எச். சேகருக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியும் ஒதுக்க கேட்டுக் கொண்டனர்.

அதில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேணு போட்டியிட முடிவாகி இருப்பதால் மக்கள் தே.மு.தி.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதே போல் சந்திரகுமார் கேட்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி போட்டியிட இருப்பதால் அந்த தொகுதி ஒதுக்குவதிலும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி கேட்டு இன்று முத்துசாமி அண்ணா அறிவாலயம் வந்தார். அவருடன் நீங்களே பேசிக் கொள்ளுங்கள் என்று தி.மு.க. தரப்பில் சந்திரகுமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முத்துசாமியும், சந்திரகுமாரும் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசினார்கள். என்றாலும் உடன்பாடு பற்றி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மக்கள் தே.மு. தி.க. தலைவர் சந்திரகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:–

கேள்வி:– மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்களே, முடிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா?

பதில்:– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். மக்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றியும், எங்களது கருத்துக்கள் சிலவற்றையும் எடுத்து கூறினேன்.

ஒருசில தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் அவரிடம் பேசியுள்ளேன். நிச்சயமாக கலைஞரிடம் பேசி நல்ல முடிவை சொல்வதாக தெரிவித்து உள்ளார். எனவே நிச்சயமாக நல்ல முடிவை தெரிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →