Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK and AIADMK converted state in to a burial ground: Premalatha.

By   /  February 21, 2016  /  Comments Off on DMK and AIADMK converted state in to a burial ground: Premalatha.

    Print       Email

pramalata_2744911f‘திமுகவும் அதிமுகவும் தமிழகத்தைப் புதைகுழி அளவுக்குக் கொண்டுவந்துவிட்டன’- பிரேமலதா கடும் தாக்கு.

காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் அவர் பேசிய தாவது: எல்லா கட்சிகளின் தேடலும் தேமுதிக மாநாடு நடைபெறும் இடமான இந்த வேடலை நோக்கியே திரும்பி யிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுக்காக எல்லா கட்சிகளும் காத்திருக்கின்றன. 1967-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் அண்ணா மாபெரும் அரசியல் திருப்பு முனையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார். அதேபோன்று 2016 சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவார்.

InCorpTaxAct
Suvidha

அதிமுக ஆட்சி என்றாலே எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்த ஆட்சி என்ற நிலையே காணப்படுகிறது. இதுதான் அவர்கள் ஆட்சியின் சாதனை. மழை என்பது இறைவன் கொடுத்த பெரும் வரம். ஆனால் அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, அண்மை மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டன. ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைத்து குடும்பங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.

பெரும் மழை பெய்து இரண்டு மாதத்துக்குப் பிறகு, இன்றைக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாத அவல நிலை எங்கும் ஏற்பட்டுள்ளது. பெய்த மழை முழுவதும் வீணாகக் கடலுக்குச் சென்றுவிட்டது. இதற்கெல்லாம் இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளே காரணம்.

இந்த ஆட்சியில் சாலைகள் எதுவும் சீர்செய்யப்படவில்லை. இந்த ஆட்சி யால் தொடங்கப்பட்ட தகவல் தொடர்பு மையத்துடன் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த ஆட்சியின் எல்லா திட்டங்களும் வெறும் அறிவிப்புகளாகவே ஆகிவிட்டன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக என்ன நிலையில் இருந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்க ளிலும் அதிமுகவுக்கு தோல்வியே கிடைத்தது. ஒரு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது.

அத்தகைய அதிமுக கடந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெறவும், ஜெயலலிதா முதலமைச்சராகவும், அதிமுகவினர் அமைச்சர் பதவிகளில் அமரவும் தேமுதிகவின் தயவே காரணம். இந்த சூழலில், வரும் தேர்தலில் தேமுதிகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அதிமுக அமைச்சர்கள் பேசுகின்றனர். இந்த ஆட்சியில் அமைச்சர்களையெல்லாம் அடிமைகள் போல் முதல்வர் ஜெயலலிதா நடத்துகிறார்.

இந்த ஆட்சி தமிழகத்தை புதைகுழியில் தள்ளும் நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது. அதிமுகவின் இந்த மோசமான ஆட்சியை அப்புறப் படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. வரும் தேர்தலில் நிச்சயம் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும்.

வரும் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங் மேக்கராக இருப்பதை தேமுதிக தொண்டர்கள் விரும்பமாட்டார்கள். அவர் கிங் ஆக இருப்பதையே விரும்புவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →