Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK – Cong alliance will form the govt. in Pondicherry: Opinion Poll

By   /  April 2, 2016  /  Comments Off on DMK – Cong alliance will form the govt. in Pondicherry: Opinion Poll

    Print       Email

M. Karunanidhi (R), chief minister of the southern Indian state of Tamil Naidu, speaks with chief of India's ruling Congress party Sonia Gandhi (L) during an election campaign rally in the southern Indian city of Chennai May 10, 2009. India is holding a general election between April 16 and May 13. REUTERS/Babu (INDIA)

புதுச்சேரியில் திமுக – காங் கூட்டணி ஆட்சி அமைக்கும் ; கருத்துக் கணிப்பில் தகவல்.

InCorpTaxAct
Suvidha

புதுச்சேரி மாநில சட்டசபைக்கு கடந்த 2011–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வும்– ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அவர்களை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் கடந்த தேர்தலில் இந்த இரு அணிகளுக்கும் இடையே நேரடி பேட்டி ஏற்பட்டது.

தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.க.வுக்கு 5 இடங்கள் கிடைத்தன.

தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்த தடவை புதுச்சேரி தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தொடக்கத்திலேயே விலகிச் சென்று விட்ட ரங்கசாமி இந்த தடவை தனித்து போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிடுகிறது.

தி.மு.க.வுடன் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தற்போது அங்கு மும்முனைப் போட்டி உரு வாகி இருக்கிறது.

மும்முனைப் போட்டியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று இந்தியா டி.வி.யும் – சி வோட்டர்ஸ் அமைப்பும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு 17 இடங்களில வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தயவில் கடந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிய ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் வரும் தேர்தலில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தடவை 15 இடங்களைப் பெற்ற என்.ஆர். காங்கிரசுக்கு இந்த தடவை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரங்கசாமிக்கு சரியான கூட்டணி இல்லாததாலும், உள்கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே என்.ஆர். காங்கிர சில் இருந்து அங்காளன் எம்.எல்.ஏ. விலகி விட்டார்.

3 தடவை எம்.எல்.ஏ. வாக இருந்துள்ள அவர் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். அவர் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட சீட் கொடுப்பதாக காங்கிரஸ் மேலிடம் உறுதி அளித்துள்ளது.

தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் பலருக்கு ரங்கசாமி சீட் கொடுக்க மாட்டார் என்று தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் என்.ஆர். காங்கிரசில் இருந்து விலகி வேறு கட்சிகளுக்கு சென்று போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →