Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK Gen. sec. Anbazhagan not contesting election.

By   /  April 13, 2016  /  Comments Off on DMK Gen. sec. Anbazhagan not contesting election.

    Print       Email

Anbazhagan_Thmni_1550460fதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தேர்தலில் போட்டி இல்லை.

தி.மு.க. மூத்த தலைவர்களில் பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு பல்வேறு தனி சிறப்புகள் உண்டு.

InCorpTaxAct
Suvidha

தி.மு.க.வில் 1977–ம் ஆண்டு முதல் இவர் பொதுச் செயலாளராக உள்ளார். அந்த பதவிக்கு அவர் தொடர்ச்சியாக 9 தடவை தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வினரால் அன்போடு “பேராசிரியர்” என்று அழைக்கப்படும் அவர் 1962–ம் ஆண்டு முதல் 1967–ம் ஆண்டு வரை எம்.எல்.சி எனப்படும் மேல் சபை உறுப்பினராக இருந்தார். 1967–ம் ஆண்டு முதல் 1971 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதன்பிறகு தமிழக சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு 9 தடவை எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். தமிழக அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்.

கடந்த டிசம்பர் மாதம் அவர் தனது 94–வது பிறந்த நாளை கொண்டாடினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி 14–வது தடவையாக தேர்தலில் போட்டியிடும் நிலையில் அன்பழகனும் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 94 வயதாகி விட்டதால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அன்பழகன் கூறி விட்டதாக தெரியவந்துள்ளது. அவரது கோரிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.

எனவே இந்த தேர்தலில் அன்பழகன் போட்டியிடவில்லை. என்றாலும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய அன்பழகன் திட்டமிட்டுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →