Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

DMK leaders meet TN Governor asking for trust vote. Stalin avoids him.

By   /  August 28, 2017  /  Comments Off on DMK leaders meet TN Governor asking for trust vote. Stalin avoids him.

    Print       Email

மைனாரிட்டி எடப்பாடி அரசை ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது – ஆளுநரை சந்தித்தப்பின் துரைமுருகன் பேட்டி

 

InCorpTaxAct
Suvidha

 

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசகர் ராவை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கனிமொழி, எஸ்.ஆர்.பாரதி ஆகிய எம்.பி.க்கள், திமுக கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜேந்திரன் ஆகியோரும் உடன் சென்றனர். காங்கிரஸ் கொறடா விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபுபக்கர் ஆகியோர் திமுகவினருடன் ஆளுநர் மாளிகை வந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியதாவது:-

முதலமைச்சர் அணியில் 113 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். தற்போதைய ஆட்சி மெஜாரிட்டியை இழந்துள்ளது, மைனாரிட்டி ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதால் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளோம்.

சட்டப்பேரவையை கூட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநரிடம் வலியுறுத்தினோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத்தலைவரை சந்தித்து முறையிடுவோம்

கோரிக்கையை ஆய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலைக்கு ஆளுநர் எங்களை தள்ளமாட்டார் என்று நம்புகிறோம்.

ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற போது 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். அதனால் தற்போது மைனாரிட்டி அரசாக மாறிவிட்டதால் நிச்சயம் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கெனவே இரண்டு முறை கவர்னரைச் சந்தித்து வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முறையிட்டும் கவர்னர் கண்டுகொள்ளாததால் இம்முறை கவர்னரை சந்திப்பதைத் தவிர்க்கவே வெளியூர் சுற்றுப்பயணத்திற்கு ஸ்டாலின் ஏற்பாடு செய்துகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →