Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

DMK Ratapuram block Candidate complained to the Chief Electoral Officer

By   /  August 6, 2016  /  Comments Off on DMK Ratapuram block Candidate complained to the Chief Electoral Officer

    Print       Email

ராதாபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்201608060816280691_Radhapuram-constituency-Candidate-complained-to-the-Chief_SECVPF

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ராதா புரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிடம் புகார் அளித்தார்.

InCorpTaxAct
Suvidha

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.அப்பாவு நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக நான் போட்டியிட்டு, கடந்த 19-5-2016 அன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி 18 சுற்றுகள் நியாயமாக நடைபெற்றது. ஆனால், 19, 20, 21-வது சுற்றுகளும், தபால் ஓட்டுகளும் தவறாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் 19-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற 3,192 வாக்குகளுக்கு பதிலாக 3,242 வாக்குகள் என்றும், 20-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற 3,526 வாக்குகளுக்கு பதிலாக 3,659 வாக்குகள் என்றும், 21-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற 1,992 வாக்குகளுக்கு பதிலாக 2,157 வாக்குகள் என்றும் தவறாக அறிவித்துவிட்டு, அதன்பிறகு தபால் ஓட்டுகளில் எனக்குரிய 300 வாக்குகள் செல்லாது எனவும் அறிவித்துவிட்டனர்.

இவ்வாறு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் முருகானந்தமும், அவரோடு இருந்த தேர்தல் பார்வையாளரும் சட்டத்திற்கு புறம்பாக 599 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற என்னை வெற்றி பெற்றவர் என்று அறிவிக்காமல் தோற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் என்று அறிவித்துள்ளார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 29 தகர டிரங் பெட்டிகளில் பூட்டும் இல்லை. சீல் வைக்கவும் இல்லை. அத்தாட்சி அட்டையும் இல்லை. மேலும், அனைத்து பெட்டிகளும் திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் 29 கண்ட்ரோல் யூனிட்டுகளிலும் இணைக்கப்பட்டிருந்த சீட்டுகள் இல்லை. 79 கண்ட்ரோல் யூனிட் இருந்த 8 தகர டிரங் பெட்டிகள் சீல் இல்லாமலும், 2 கண்ட்ரோல் யூனிட் வெளியே தனியாகவும் இருந்துள்ளது.

மேற்படி சம்பவங்களை பார்த்தால் ராதாபுரம் தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்தும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடைபெறும் விசாரணையில் முறையீடு செய்யப்படும் என்பதுடன், மேற்படி முறைகேடுகளுக்கு ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முழு பொறுப்பாளர்கள் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-Amudhavan

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →