Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK to contest 176 constituencies : 58 for alliance

By   /  April 9, 2016  /  Comments Off on DMK to contest 176 constituencies : 58 for alliance

    Print       Email

Flag_DMK.svgதிமுக 176 தொகுதிகளில் போட்டி; கூட்டணிக்கு 58 தொகுதிகள்.

இந்த 58 தொகுதிகளில் காங்கிரசுக்கு 41, மனித நேய மக்கள் கட்சிக்கு–5, முஸ்லிம் லீக் கட்சிக்கு–5, புதிய தமிழகம் கட்சிக்கு–4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், புதிய தமிழகம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.

என்.ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி சிவகாமியின் சமூக சமத்துவப்படை, பொன்.குமாரின் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டும் இன்னமும் போட்டியிடும் தொகுதி விவரம் அறிவிக்கப்படவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கும் இவர்கள் மூவருக்கும் ஓரிரு நாட்களில் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டு விடும்.

58 தொகுதிகள் போகமீதமுள்ள 176 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த 176 தொகுதிகள் எவை–எவை என்று தெரிந்து விட்டது.

இந்த தொகுதிகள் அனைத்திலும் அ.தி.மு.க.வுடன் தி.மு.க. நேரடி பலப்பரீட்சை நடத்த உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பலப்பரீட்சை நடத்த இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →