Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

DMK will benefit from multi cornered contest – says Karunanidhi

By   /  May 12, 2016  /  Comments Off on DMK will benefit from multi cornered contest – says Karunanidhi

    Print       Email

பலமுனைப் போட்டி திமுகவுக்கு சாதகமாக இருக்கும்- கருணாநிதி கருத்து.Karunanidhi-big

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

InCorpTaxAct
Suvidha

தேர்தல் முடிவு குறித்து நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆளும் கட்சி மீண்டும் வென்று ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய சென்று வந்தபோது, மக்கள் திரளாக வந்து என் மீது அன்பையும், ஆதரவையும் காட்டியதை காண முடிந்தது. மக்கள் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மக்களின் விருப்பத்தை தி.மு.க.வால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

திராவிட கட்சிக்கு மாற்றாக இருப்பதாக மக்கள் நலக் கூட்டணியும், பா.ம.க.வும் சொல்லி வருகிறது. யார் வேண்டுமானாலும் திராவிட கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று சக்தி என்று சொல்லலாம். எல்லாருக்கும் தங்கள் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. அதை யாரும் தடுக்க முடியாது.

தி.மு.க.வை பொருத்தவரை அது கடந்த காலத்தை விட தற்போது மிகவும் வலுப்பெற்று பலம் பொருந்திய கட்சியாக மாறியுள்ளது. எனவே தேர்தல் முடிவுதான் மாற்றுசக்தி என்று தங்களைத் தாங்களே முன்னிறுத்தி கொள்பவர்களின் முடிவுகளை நிர்ணயம் செய்யும்.

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது தேர்தல் அறிக்கையில் சொல்லிய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம். அதனால் தமிழகத்தின் சமூக-பொருளாதார நிலையில் மேம்பாடு ஏற்பட்டது. வளர்ச்சி விகிதத்தில் இந்தியாவில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

தி.மு.க. நடத்திய நல்லாட்சியை மக்கள் உணர்ந்தனர். அவர்கள் தி.மு.க.வை வெறுக்கவில்லை. ஆனால் சிலர் தி.மு.க.வுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

தி.மு.க.வை அவர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை. இப்படி எத்தனை தடைகள் இருந்தாலும் தி.மு.க. வெற்றிகரமாக தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போதைய தேர்தலில் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. எளிதில் வெற்றி பெறுவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் இதுவரை கூட்டணி அரசு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டு போட்டதில்லை. இந்த தேர்தலிலும் அவர்களது முடிவில் மாற்றம் இருக்காது.

தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் மு.க.ஸ்டாலின் புதிய உச்சத்தை தொட்டு சாதனைப் படைப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் கடின உழைப்பாளி. அரசியலின் உயர்மட்டத்துக்கு வர அவருக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது.

அரசியலில் குறிப்பிட்ட காலத்துக்குள் எதுவும் நடந்து விடாது என்பது எல்லாருக்கும் தெரியும். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பெரியார், அண்ணா மற்றும் நான் எங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்துக்குள் அடுத்தக் கட்டத்துக்கு செல்லவில்லை என்பது தெரியும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →