Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Donald Trump mocks Indian call centre!

By   /  April 23, 2016  /  Comments Off on Donald Trump mocks Indian call centre!

    Print       Email

1090281-DonaldTrump-1461400057-262-640x480இந்தியன் கால் சென்டர்களில் எப்படிப் பேசுகிறார்கள்? நக்கலடித்துக் காட்டினார் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்ட் டிரம்ப். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளவராக பெரிதும் பேசப்பட்டு வரும் டிரம்ப், அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

வெளிநாட்டினரையும், வந்தேறிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன். இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால் சென்டர்களை நக்கலடிக்கும் விதமாக தற்போது டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெலவேர் மாநிலத்தில் தனது ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று பேசிய டிரம்ப், அமெரிக்காவின் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் எல்லாம் இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

உதாரணத்துக்கு, தான்பயன்படுத்திவரும் கிரெடிட் கார்ட் தொடர்பாக விளக்கம் பெறுவதுபோல் நடித்து, அந்த வங்கியின் சேவை மையத்தை போலியாக வேறொரு வாடிக்கையாளர்போல் தொடர்பு கொண்ட தனது அனுபவத்தை இந்தக் கூட்டத்தில் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

’எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்த நபரிடம் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். இந்தியாவில் இருந்து பேசுகிறோம் என்று எதிர்முனையில் இருந்தவர் பதில் சொல்கிறார். அப்படியா, ரொம்ப அழகாக இருக்கிறது என்றுகூறி தொலைபேசி இணைப்பை நான் துண்டித்து விட்டேன்’ என பலத்த சிரிப்பொலிக்கு இடையில் டொனால்ட் டிரம்ப் ’நக்கலாக’ குறிப்பிட்டார்.

இந்தியா மிகசிறந்த நாடு. மற்ற நாடுகளின் தலைவர்கள்மீது எனக்கு அதிருப்தி கிடையாது. இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களே என்று இங்குள்ள தலைவர்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இதுபோன்ற தந்திரமான வங்கிமுறை நமது நாட்டில் நீடிப்பதற்கு இங்குள்ள தலைவர்கள்தான் காரணம்.

சீனா மீதோ, ஜப்பான் மீதோ, வியட்நாம் மீதோ, இந்தியா மீதோ எனக்கு கோபமில்லை. இவர்கள் நம்நாட்டின் வேலைவாய்ப்பை பறித்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.

நம்நாட்டு வர்த்தகத்தில் சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளை அனுமதிக்கும் கொள்கைக்கு நாம் இடமளிக்க கூடாது.

நமதுநாட்டின் உற்பத்திசார்ந்த தொழில்கள் பறிக்கப்படுகின்றன. நமது வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் நாம் இழப்பை சந்தித்து வருகிறோம். வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலையில் நமக்கு சாதகமாக எதுவும் இல்லை. நமது நாடு இனியும் ஜெயிக்க முடியாது. இதற்கு மேலும் இதைப்போன்ற செயல்கள் நடப்பதை நாம் அனுமதிக்க கூடாது. சின்ன குழந்தைகளின் கையில் இருந்து மிட்டாயை பறிப்பதுபோல் நம்நாட்டு வர்த்தகத்தை பிறநாடுகள் பறித்துச் செல்லும் கொள்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் டொனால்ட் டிரம்ப் காட்டமாக கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →