Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Don’t praise me, I don’t like eulogy: Anushka

By   /  February 1, 2016  /  Comments Off on Don’t praise me, I don’t like eulogy: Anushka

    Print       Email

Anushka-Hot-Photos-Anushka-Shetty-121புகழ்ச்சி எனக்குப் பிடிக்காது.- நடிகை அனுஷ்கா சொல்கிறார்.

புகழ்ச்சி எனக்குப் பிடிக்காது என்று நடிகை அனுஷ்கா கூறினார். “புகழ்ந்து பேசுவது எல்லாருக்கும் பிடிக்கும். ஒருவரை இன்னொருவர் உயர்வாக பேசினால் அது சம்பந்தப்பட்டவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தலையில் ஐஸ் வைத்த மாதிரி குளிர்ந்துபோவார். ஆனால் என்னைப் பொறுத்தவரை புகழ்ச்சி என்பது பிடிக்காது.

InCorpTaxAct
Suvidha

எனது நடிப்பை விமர்சனம் செய்தால் கூர்ந்து கவனிப்பேன். இந்த கதாபாத்திரம் சரியல்ல. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று சொன்னால் அதன்படி என்னை மாற்றிக்கொள்ள முயற்சிப்பேன். குறைகள் சொன்னாலும் அதனை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன். ஆனால் புகழ்ந்து பேசினால் தடுமாற்றம்தான் வரும். வெட்கப்படுவேன். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்புவேன். சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு புகழ்ந்து பேசுபவர்களிடமிருந்து விலகிச் சென்றுவிடுவேன்.

என்னை சந்தோஷப்படுத்தவேண்டும் என்ற உள்நோக்கத்தில்தான் புகழ்கிறார்கள். அதை நான் விரும்புவதில்லை. சில நேரங்களில் நான் கரீனா கபூரைப் போல் இருப்பதாக ஒப்பிட்டும் பேசுகிறார்கள். கரீனா கபூர் எனக்குப் பிடித்த நடிகை. விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதன்படியே எனது சினிமா வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறேன்.” இவ்வாறு கூறினார் அனுஷ்கா.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →