Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Dr. Ramadass urged women’s safety : Calls for demonstration on 9th.

By   /  August 5, 2016  /  Comments Off on Dr. Ramadass urged women’s safety : Calls for demonstration on 9th.

    Print       Email

maxresdefaultபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 9-ந்தேதி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

InCorpTaxAct
Suvidha

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் கடந்த ஜூன் 24-ந்தேதி கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரத்தில் நவீனா என்ற ஏழை மாணவியின் வீட்டிற்குள் நான்கு நாட்களுக்கு முன் புகுந்த செந்தில் என்ற மிருகம் அம்மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.

சுவாதிக்கும், நவீனாவுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் எதிர்பாராமல் நடந்த வையோ, ஒரு நாள் பகையின் வெளிப்பாடோ அல்ல. முதலாமவருக்கு மூன்று மாதங்களாகவும், இரண்டாமவருக்கு மூன்று ஆண்டுகளாகவும் கொடுக்கப்பட்டு வந்த தொல்லையின் உச்சக்கட்டம் தான் அவை.

இதன் பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

எனவே தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

இதில் நான் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறேன். தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பங்கேற்கும் இப்போராட்டத்திற்கு பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி தலைமையேற்க உள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →