Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

ED seizes 3 acres of land belonging to Lalu Prasad Yadav’s family.

By   /  December 9, 2017  /  Comments Off on ED seizes 3 acres of land belonging to Lalu Prasad Yadav’s family.

    Print       Email

லாலுபிரசாத் குடும்பத்தின் ரூ.45 கோடி சொத்து முடக்கம்

 

InCorpTaxAct
Suvidha

 

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியின்போது ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். அப்போது, அவர் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் 2 ஓட்டல்களின் பராமரிப்பு உரிமையை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளித்ததாகவும் இதற்காக பாட்னா நகரில் முக்கியமான இடத்தில் 3 ஏக்கர் நிலத்தை வணிக வளாகம் கட்டுவதற்காக லாலுபிரசாத்தின் குடும்பத்தினர் பினாமி நிறுவனம் ஒன்றின் மூலம் லஞ்சமாக பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் லாலுபிரசாத்தின் குடும்பத்தினர் மீது மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இது தொடர்பாக லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை வரவழைத்து அமலாக்கத்துறை தீவிர விசாரணையும் மேற்கொண்டது.

இந்த நிலையில், பாட்னா நகரில் லாலுபிரசாத்தின் குடும்பத்தின் பெயரில் உள்ள ரூ.45 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை முடக்கி வைப்பதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்தது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Shailesh Lakhtakia’s Journey

Read More →