Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Edapadi heads 31 members cabinet: Sengottaiyan included.

By   /  February 16, 2017  /  Comments Off on Edapadi heads 31 members cabinet: Sengottaiyan included.

    Print       Email

201702161710497462_ministers-in-new-cabinet-leg-by-edappadi-palanisamy_secvpfஎடப்பாடி தலைமையில் 31 பேர் கொண்ட அமைச்சரவை ; மாஃபா பாண்டியராஜனுக்கு பதில் செங்கோட்டையன்.

தமிழகத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பதவி வருமாறு. இவர்கள் அத்தனைப் பேரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  அமைச்சரவையிலும் அதனைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மாஃபா பாண்டியராஜன் ஓ. பன்னீர் செல்வம் அணிக்குச் சென்றுவிட்டதால் அவருக்குப் பதில் கே.ஏ.செங்கோட்டையன் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

InCorpTaxAct
Suvidha

1. எடப்பாடி கே.பழனிச்சாமி – முதல் அமைச்சர்
2. திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை அமைச்சர்
3. கே.ஏ.செங்கோட்டையன் – பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்
4. செல்லூர் கே.ராஜு – கூட்டுறவுத்துறை அமைச்சர்
5. பி.தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்
6. எஸ்.பி.வேலுமணி – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்
7. டி.ஜெயக்குமார் – மீன்வளத்துறை அமைச்சர்
8. சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
9. கே.பி.அன்பழகன் – உயர்கல்வித்துறை அமைச்சர்
10. டாக்டர் வி.சரோஜா – சமூக நலன், சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர்

11. எம்.சி.சம்பத் – தொழில்துறை அமைச்சர்
12. கே.சி.கருப்பண்ணன் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
13. ஆர்.காமராஜ் – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
14. ஓ.எஸ்.மணியன் – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

  1. கே.ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்

16. டாக்டர் சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்
17. ஆர்.துரைக்கண்ணு – வேளாண்துறை அமைச்சர்
18. கடம்பூர் ராஜு – செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
19. ஆர்.பி.உதயகுமார் – வருவாய்த் துறை அமைச்சர்
20. என்.நடராஜன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

  1. கே.சி.வீரமணி – வணிக வரித்துறை அமைச்சர்
    22. கே.டி.ராஜேந்திர பாலாஜி – பால்வளம், பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர்
    23. பி.பெஞ்சமின் – ஊரக தொழில்துறை அமைச்சர்
    24. டாக்டர் நிலோபர் கபில் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
    25. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை அமைச்சர்
    26. டாக்டர் எம்.மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
    27. வி.எம்.ராஜலட்சுமி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
    28. ஜி.பாஸ்கரன் – காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர்
    29. எஸ்.ராமச்சந்திரன் – இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
    30. எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
    31. பி.பாலகிருஷ்ண ரெட்டி – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →