Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Edappadi doesn’t know the difference between confidence motion & no confidence motion: Stalin

By   /  August 13, 2017  /  Comments Off on Edappadi doesn’t know the difference between confidence motion & no confidence motion: Stalin

    Print       Email

அதிமுக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை திமுக கொண்டு வரவில்லை. முதல்வருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குமான வித்தியாசம் தெரியவில்லை;  ஸ்டாலின்

 

EIS
EnGeniusInc

 

அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதே தவிர, அதை திமுக கொண்டு வரவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி. தினகரனும் ஒருவரை ஒருவர் 420 (சீட்டிங்) என்று வசை பாடி, மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறார்கள். அவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டைகளுக்குள் நாங்கள் நுழைய விரும்பவில்லை. அவை எல்லாம் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் நடக்கும் தகராறுகளை வேடிக்கை பார்க்கவோ, அவற்றில் தலையிடவோ நாங்கள் விரும்பவில்லை.

அதிமுக பிளவுக்கு பாஜக காரணமா, இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி. அதுபற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நீட் பிரச்சினை, இந்தித் திணிப்பு போன்ற பல பிரச்னைகளில் அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜகதான் காரணம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன் அமைச்சர்கள் சுருட்டப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்து இருப்பதோடு, 3 அணிகளும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். யாரெல்லாம் குற்றவாளிகள் என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள்.

தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோதும், தேவைப்பட்டால் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தேன். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஏற்கெனவே கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன் அரசு மீது நாங்கள் நம்பிக்கைத் தீர்மானமே கொண்டு வரவில்லை. சபாநாயகர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.

அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் அது நடைபெற்றது. திமுக சார்பில் கொண்டு வரப்படவில்லை. எனவே, இதைக்கூட முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ளவில்லையே என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் என்று வருகின்றபோது, அந்தநேரத்தில் இருக்கக்கூடிய சூழலைப் பொறுத்து, திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும்.

நேற்றைய தினம், முரசொலி பவள விழாப் பொதுக்கூட்டம் தொடங்கவிருந்த நேரத்தில் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அந்தப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது” என்று ஸ்டாலின் கூறினார்.

 

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Rajiv Gandhi assassination: Perarivalan can’t be released for now, says SC. SC ready to take Rajiv Gandhi murder case from the beginning.

Read More →