ஜெயலலிதா அறையில் முதல்வராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழக முதல்வராக தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்ற பழனிச்சாமி, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஜெயலலிதா அறையில் பழனிச்சமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா அறையை ஜெயலலிதா நாற்காலியையும் பயன்படுத்தினார் பழனிச்சாமி. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற போது காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, முதலமைச்சராக பொறுப்பேற்றபின் 5 முக்கிய கோப்புகளில் பழனிச்சாமி கையெழுத்திட்டார்.
முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிச்சாமிக்கு அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை, அவைத் தலைவர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.