எகிப்து வீரருடன் கைகுலுக்க இஸ்ரேல் வீரர் மறுப்பு; ரியோ ஒலிம்பிக்கில் சம்பவம்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த100 கிலோகிராம் பிரிவு ஜூடோ போட்டியில் இஸ்ரேல் வீரர் ஒர் சாசன், எகிப்து வீரர் எல் ஷெகாபி யுடன் மோதினார். ஒர் சாசன் இப்போட்டியில் வெற்றிபெற் றார்.
பொதுவாக ஜூடோ போட்டிக்கு பிறகு அதில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஒருவருக்கொருவர் குனிந்து வணக்கமிட்டு கைகுலுக்குவது வழக்கம். ஆனால் ஒர் சாசன் கைகுலுக்கச் சென்றபோது எகிப்து வீரர் பின்வாங்கினார். தன் தலையை அசைத்து அவருடன் கைகுலுக்க மறுத் தார். எகிப்து வீரரின் இந்த செய் கையை கண்டித்து அரங்கில் இருந்த ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேல் வீரருக்கு எதிராக எல் ஷெகாபி மோதுவதற்கு எகிப்து நாட்டில் முன்பே எதிர்ப்பு இருந்தது. “இஸ்லாமியர் களுக்கு எதிராக செயல்படும் இஸ்ரேல் வீரருடன் எல் ஷெகாபி போட்டியிடக்கூடாது. இப்போட்டியில் ஜெயிப்பதன் மூலம் அவர் சாதிப்பதற்கு ஏதும் இல்லை. ஆனால் அவர் தோற் றால் நாட்டுக்கே மிகப்பெரிய அவமானம் ஏற்படும்” என்று அந்நாட்டைச் சேர்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள் குரலெழுப்பி வந்தன.
இந்த சூழலில்தான் இஸ்ரேல் வீரருடன் கைகுலுக்க எகிப்து வீரரான எல் ஷெகாபி மறுத்துள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.