வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது.
இதில் தி.மு.க.வுக்கு 89 இடங்களில் கிடைத்தது. காங்கிரசுக்கு 8 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதே போல் பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர்பாபு, இ.கருணாநிதி, ப.ரங்கநாதன், க.சுந்தர், எஸ்.சுதர்சனம், வரலட்சுமி மதுசூதனன், கே.பி.பி.சாமி, தாயகம்கவி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட 89 எம்.எல்.ஏ.க்களும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்னும் 2 வாரத்தில் நடைபெற இருப்பதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. சட்டமன்ற தலைவர், துணைத்தலைவர், கொறடா ஆகியோரை தேர்ந்தெடுத்து அறிவிக்க உள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.