Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Election commission lifts ban on free rice supply in Kerala

By   /  April 8, 2016  /  Comments Off on Election commission lifts ban on free rice supply in Kerala

    Print       Email

ucm319871கேரளாவில் இலவச அரிசி விநியோகத்துக்கான  தடையை நீக்கியது தேர்தல் கமிஷன்.

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பட்ஜெட் தொடரில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 20 லட்சம் குடும்பத்துக்கு மாதம் தலா 25 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார். ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று கேரள அரசு தெரிவித்தது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், கேரள சட்டப்பேரவைக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து, தேர்தலை கருத்தில் கொண்டு, கேரள அரசின் இந்த இலவச அரிசி திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே இத்திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதாக கூறி கேரள அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசிற்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. இருப்பினும் புதிய ஆட்களை இந்த திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் பொதுவிநியோக அரிசி திட்டத் தொடக்க விழாக்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →