Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Election commission should ban opinion polls.

By   /  May 3, 2016  /  Comments Off on Election commission should ban opinion polls.

    Print       Email

கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.

மக்கள் நலக் கூ201605031656031551_EC-should-ban-opinion-polls-CPI_SECVPFடணி-தே.மு.தி.க.-பா.ம.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

InCorpTaxAct
Suvidha

ஈரோட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். இந்த கருத்துக்கணிப்புகளை குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக வெளியிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது” என்றார்.

மக்கள் நலக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது, இளைஞர்களும் பெண்களும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதால் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

“பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்கு வரும்போது கெயில் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விளக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்தும் அறிவிக்க வேண்டும்” என்றும் முத்தரசன் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →