19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி பெண்மணி 117-வது வயதில் காலமானார்
உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ தனது 117-வது வயதில் காலமானார். தனது 117-வது பிறந்தநாளை கடந்த டிசம்பர் மாதம் கொண்டாடினார்.
1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார்.
கடந்த பிறந்த நாளின் போது தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:-
என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65-வது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன்.
நான் 26 வயதாக இருந்த போது ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.
பின்னர் என்னுடைய கணவனை நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன். இத்தாலியில் அதுவே முதல் சம்பவமாக இருந்தது.
பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து கூட நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள்.
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார். தன் வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களையும் பார்த்துள்ளார். இத்தாலியில் இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளது.
மொரனோ மரணத்தை தொடர்ந்து 1900-ம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யாரும் இல்லை என்று என்பது கிட்டத் தட்ட உறுதியாகி உள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.