Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Ensure no farmer is pushed to commit suicide: SC to Centre

By   /  March 4, 2017  /  Comments Off on Ensure no farmer is pushed to commit suicide: SC to Centre

    Print       Email

340215-274398-farmer-suicideவிவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட்டு

 

InCorpTaxAct
Suvidha

இழப்பீடு தருவது தீர்வு ஆகாது என்றும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் வறட்சி மற்றும் கடன் பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அந்த மாநில ஐகோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அந்த தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதாடுகையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், 2015-ம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் விவசாயிகள் தற்கொலை செய்வது வெகுவாக குறைந்து இருப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

இது மிகவும் முக்கியமான பிரச்சினை. பல ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கான காரணங்களை அரசாங்கம் கண்டு அறிந்து விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படாதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசு தவறான பாதையில் செல்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.

விவசாயிகள் வங்கிகளில் இருந்து வாங்கும் கடனை திருப்பி செலுத்து முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது பிரச்சினைக்கு சரியான தீர்வு ஆகாது. அவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வரவேண்டும். கொள்கைகளை வகுக்க வேண்டும். அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும்

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கூலின் கன்சால்ஸ் வாதாடுகையில், அரசாங்கத்திடம் திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை செயல்படுத்துவதில்தான் பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறினார்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →