Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Even if communists come to power, we won’t change liquor policy – says Yechuri

By   /  April 9, 2016  /  Comments Off on Even if communists come to power, we won’t change liquor policy – says Yechuri

    Print       Email

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு கொள்கையில் மாறுதல் செய்யமாட்டோம் – யெச்சூரி 27CB66DC00000578-0-image-a-38_1429565042027அறிவிப்பு.

கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலும் மதுவை ஒழிக்க மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2014–ஆம் ஆண்டு மது பார்களை மூட உத்தர விட்டது.

InCorpTaxAct
Suvidha

இந்த பிரச்சினை கேரளாவில் பல் வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கேரள முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு வெளியானது. இதற்கு கூட மது பார் உரிமையாளர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது.

கேரளாவில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. ஒருவேளை கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்தால் மீண்டும் மதுபார்கள் திறக்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது. நேற்று திருவனந்தபுரம் வந்திருந்த அகில இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீத்தா ராம்யெச்சூரி இது சம்பந்தமாக நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் மது கொள்கையில் கேரள காங்கிரஸ் அரசு எடுத்த முடிவை நாங்கள் திரும்ப பெறமாட்டோம். அவர்கள் எடுத்த முடிவு தொடர்ந்து நீடிக்கும். மது அருந்தும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்களது கொள்கை கேரளாவிலும் மது குடிக்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

எனவே அதற்கு தகுந்த மாதிரி தான் எங்களது முடிவு இருக்கும். மதுபார்களை மீண்டும் திறக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →