Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Every one should enter politics, Kamal Hassan at Harvard University.

By   /  February 7, 2016  /  Comments Off on Every one should enter politics, Kamal Hassan at Harvard University.

    Print       Email

‘எல்லாரும் அரசியலுக்கு வரவேண்டும்’- ஹார்வர்டு பல்கலைக் கழக விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு.

Kamal Hassan Latest Stillsஅமெரிக்காவின் பிரபல ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய மாநாட்டில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

InCorpTaxAct
Suvidha

வாஷிங்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழக விழா அரங்கத்தில் ’கருத்து சுதந்திரம்’ என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். தென்னிந்தியாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்களில் முதன்முறையாக இந்த வாய்ப்பை பெற்ற கமல்ஹாசன் இவ்விழா மேடையில் பேசத் தொடங்கும்போது,

பள்ளிக் கல்வியைகூட முடிக்காதவன் நான் என்பதை உங்களிடையே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார். ஆனால், கற்றல் என்ற அடிப்படை ஆர்வம் எனக்குள் இருந்ததால் இந்த மேடையில் உங்கள் எதிரில் பேச வந்துள்ளேன்.

ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது என பலத்த கரவொலிக்கு இடையே அவர் கூறினார்.

அரசியல் ஒரு சாக்கடை என்பதால் அதை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்த கமல்ஹாசன், எல்லோரும் அரசியலில் ஆர்வம்காட்ட வேண்டும் எனவும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும். ஆனால், ஆட்டு மந்தைகளைப்போல் அரசியல் மேய்ப்பர்களின் பின்னால் நாம் சென்று விடக்கூடாது எனவும் கமல்ஹாசன் கூறினார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →