Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Ex- Student threatened to kill me – Veena Gayatri

By   /  July 30, 2016  /  Comments Off on Ex- Student threatened to kill me – Veena Gayatri

    Print       Email

15FRGAYATHRI_550209gவீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஏன்? கைதான முன்னாள் மாணவர் பரபரப்பு வாக்குமூலம்

தமிழ்நாடு இயல், இசை பல்கலைக்கழக துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஏன் என்பது பற்றி, கைதான முன்னாள் மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

InCorpTaxAct
Suvidha

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை கவின் பல்கலைக்கழக துணைவேந்தர் வீணை காயத்ரி. பல்கலைக்கழகத்தில் உள்ள இவரது அறையில் கடந்த 24-ந்தேதி மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். வீணை காயத்ரியின் புகைப்படம் கத்தியால் கிழிக்கப்பட்டது.

‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என கொலை மிரட்டல் விடுத்து கடிதமும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பு துலக்கி, அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பரணிகுமாரை (வயது 25) நேற்று கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் கடந்த 2014-ம் ஆண்டு இயல் இசைப் பல்கலைக்கழகத்தில் மிருதங்கம் வாசித்தல் பிரிவு மாணவர். 2014-ம் ஆண்டு நான் நன்றாக படித்து இருந்தும், பட்டமளிப்பு விழாவில் மிருதங்க வாசித்தல் பிரிவில் எனக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவில்லை. அதேபோல இன்னொரு சிறந்த மாணவருக்கும் விருது கிடைக்கவில்லை. எங்களை விட திறமை குறைவான ஒரு மாணவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து துணைவேந்தர் வீணை காயத்ரியிடம் முறையிட்டோம். ஆனால் அவர் எங்களை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தியதுடன், எங்களுக்கு ஆதரவாக பேசிய ஆசிரியர் சரவணன் என்பவரை பணிமாற்றம் செய்துவிட்டார்.

எனவே வீணை காயத்ரியை பழிவாங்க திட்டமிட்டு காத்திருந்தேன். அதன்படி அவரை முதல்கட்டமாக பயமுறுத்துவதற்காக அவரது அறைக்குள் நுழைந்து, பொருட்களை சேதப்படுத்தினேன். சுவரில் மாட்டப்பட்டிருந்த அவரது புகைப்படத்தை கத்தியால் கிழித்து, மிரட்டல் கடிதமும் எழுதி வைத்தேன். இதற்கு எனது நண்பர்கள் நெப்போலியன் (24), பாலாஜி (24), விக்னேஷ்குமார் (25) ஆகியோர் உதவி செய்தனர். நான் போலீசிடம் சிக்கமாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து பரணிகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நண்பர்கள் என கூறப்படும் நெப்போலியன், பாலாஜி, விக்னேஷ்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →