Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Exercise may reduce the risk of 13 types cancer – says Medical Research.

By   /  May 17, 2016  /  Comments Off on Exercise may reduce the risk of 13 types cancer – says Medical Research.

    Print       Email

Brisk-Walkingஉடற்பயிற்சியின் மூலம் 13 வகையான புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன – மருத்துவ ஆய்வறிக்கை சொல்கிறது.

வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோயை தடுக்கலாம் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பலவகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய இந்த ஆராய்ச்சியில் வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். அனைத்தையும் மீறியவகையில் அதீதமான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அனைத்துவகையான புற்றுநோயில் இருந்தும் ஏழு சதவீதம் அளவிலான பாதுகாப்பை பெற முடியும்.

கடினமான தொடர் பயிற்சி மூலம் மட்டுமல்லாது, ஓய்வுநேரங்களில் செய்யும் சிலவகை உடற்பயிற்சியின் மூலமும் புற்றுநோயில் basic_cycling_workout_beginnersஇருந்து சற்றே விலகி இருக்கலாம் என்பதும் சமீபத்தில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அப்படியே இன்னும் கொஞ்சம் தொடர்ந்து யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகளையும் சேர்த்துக்கொண்டால் பலன்கள் இன்னமும் கூடுதலாக கிடைக்குமா என்பதையும் தெரிவித்தால் மனித குலத்துக்கு உதவியாக இருக்கும்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →